முடக்கு வாதம்  (Rheumatoid Arthritis) எனப்படும் நோயானது முதன்முதலில் 19ஆம் நூற்றாண்டில் கண்டறியப்பட்டதாகும். இன்றளவில் உலகின் சுமார் 1-2% மக்களை இந்த நோய் தாக்குகின்றது.  ஓர் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம், நோய் ஏற்படுத்தும் நுண்ணுயிரிகளை விடுத்து, அந்த உடலின் திசுக்களை, குறிப்பாக மூட்டுகளைத் தாக்கி, பாதிப்பு ஏற்படுத்துவதே இந்நோய்க்குக் காரணமாகும்.

Society

பெங்களூரு
30 ஐன 2020

நமது பூமியில் ஒவ்வொரு நாளும் சராசரியாக ஐந்து நிலநடுக்கங்கள்,  5.0 அல்லது அதற்கும் மேற்பட்ட ரிக்டர் அளவில் நிகழ்கின்றன. நிலநடுக்கங்கள் அவற்றின் மூலமாக மட்டுமல்லாமல் சுனாமி போன்ற நிலநடுக்கத்திற்க்கு தொடர்புடைய சில இயற்கை பேரிடர்களால் பேரழிவினை உண்டாக்குகின்றன. பொதுவாக நிலநடுக்கத்தால் உண்டாகும் சேதம் என்பது அதன் தீவிரம் மற்றும் அதன் மையப்பகுதியிலிருந்து நிலநடுக்கம் உண்டாகும் நிலப்பரப்பின் தூரத்தினைப் பொறுத்தது.

பெங்களூரு
9 ஐன 2020

வலி என்பது உடலில் ஏற்படும் வேதனையளிக்கும் உணர்வு. நமது தினசரி அலுவல்களில் வலிகள் தவிர்க்க முடியாதவை. சிறு காயங்கள் மற்றும் விபத்துகளால் ஏற்படும்  வலிகளானது சில மணித்துளிகள் முதல் பல  நாட்கள் வரை  நீடிக்கக்கூடியவை. சிகிச்சைகளின் காலம் முடிந்தாலும், சில நேரங்களில் வலிகள் நாட்பட்ட வலிகளாக பல ஆண்டுகள் கூட நீடிப்பதுண்டு. இந்த நாட்பட்ட வலிகள் என்பவை மிகவும் துயர் நிறைந்தவை. உலகெங்கிலும் நாட்பட்ட வலிகளின் சிகிச்சைக்காக வருடத்திற்கு பல கோடி ருபாய்கள் செலவிடப்படுகின்றன., நரம்புகளில் ஏற்படும் சேதங்களால் வரும் தொடர்ச்சியான நரம்பு வலிகள்  நாட்பட்ட வலிகளில் ஒன்றாகும்.

Bengaluru
12 டிச 2019

ஈரல் அழற்சி (Hepatitis) சி என்பது ஒருவகை தொற்றுநோய். இது ஹெப்பாடிட்டீஸ் சி  எனும் ஈரல் அழற்சி நச்சுநுண்மத்தினால் (virus) உண்டாக்கப்படுகின்றது. இந்த நச்சுநுண்மம் ரத்தத்தின் மூலமாக பரவுகின்றது. நரம்பு மருந்திற்கு பயன்படுத்தப்படும் ஊசிகள் மற்றும் ரத்த தானத்தின் போது பயன்படுத்தப்படும் சுகாதாரமற்ற மருத்துவ உபகரணங்கள் போன்றவற்றினால் இந்த நச்சுநுண்மம் பரவக்கூடும். இந்த நோய்த்தொற்று ஏற்பட்ட பல வருடங்களுக்குப் பிறகும் பாதிக்கப்பட்டவர்கள் எந்தவித அறிகுறிகளும் இல்லாமல்  தெரியலாம். ஆனால், இந்நோய் நீண்ட கால விளைவுகளை ஒருங்கே கல்லீரல் செயலிழப்பு மூலமாக வெளிப்படுத்தும்.

சென்னை
23 ஆக 2019

நம் பள்ளிகளில் மாணவர்களுக்கு பெரும் சவாலாகவுள்ள காரணிகள் எவை தெரியுமா? நீண்ட நேர வகுப்புகளும், மாணர்வர்களின்  கிரகிக்கும் திறனும், கூடவே அவர்களின் பார்வைக்கூர்மையும் ஆகும். ஒரு நாளில் மூன்றில் ஒரு பங்கு நேரத்தை பள்ளிகளில் செலவழிக்கும் குழந்தைகளுக்கு அவர்களின் வகுப்பறைகள் கல்வி கற்க போதுமான சூழலை உருவாக்குகிறதா?

பெங்களூரு
27 ஜூன் 2019

தமிழ் நாட்டில் இருந்து கண்டறியப்பட்ட இரும்பு காலத்தை சேர்ந்த உலோக பண்டங்கள், தமிழரின் பண்டைய உலோகவியல் அறிவை பறைசாற்றுகிறது.

25 ஏப் 2019

இந்தியாவில், பருவமழைக் காலம் வெயில் காலத்தின் முடிவு மட்டுமல்ல, அது பல்வேறு நோய் தொற்றுக்கான காலமும் கூட. நூறு கோடிக்கும் அதிகமாக இருக்கும் இந்திய மக்கள் தொகையில்,  பொது சுகாதாரம் மற்றும் பொருளாதாரத்திற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் தொற்றுநோய்களை கட்டுப்படுத்துவது என்பது இன்றளவில் மிகப்பெரும் சவாலாக உள்ளது. டெங்கி காய்ச்சல் எனப்படும் முடக்குங்காய்ச்சல் - கொசுக்களால் பரப்பப்படும் தொற்றுநோய். ஒவ்வொரு வருடமும் இந்நோய் மக்களிடம் மிகப்பெரும் தாக்கத்தினை ஏற்படுத்துகின்றது.

நெதர்லாந்து
14 ஏப் 2019

பல்வேறு கலாச்சாரங்களைக்கொண்டு பன்முகத்தன்மையுடன் விளங்கும் ஒரு தேசம் இந்தியா. இங்கே பேசப்படும் எண்ணற்ற மொழிகளே இதற்கு சான்றாக திகழ்கிறது. இந்தியாவில் வழக்கிலிருக்கும் மொழிகளை கற்பது உற்சாகமூட்டும் ஒரு செயலாக இருந்தாலும், இந்திய துணைக் கண்டத்தில், இந்தோ-ஆரிய மொழிகளின் வருகைக்கு முன், அதாவது கி.மு 1500ஆம் ஆண்டுக்கு முன்னிருந்தே வாழ்ந்து வரும் திராவிடர்களின் வரலாற்றை புரிந்துகொள்ள முக்கிய காரணிகளாக இந்தியாவின் மொழிகள் திகழ்கின்றன. இந்தியாவில் திராவிடர்களின் தோற்றம் மற்றும் பரவல்குறித்த வரலாறு இன்றும் முழுதாக அறியப்படாமலே உள்ளது.