நீங்கள் இங்கே

வகுப்பறையின் சூழலும் மாணவர்களின் பார்வை திறனும்

Read time: 1 நிமிடம்
  • வகுப்பறையின் சூழலும்  மாணவர்களின் பார்வை திறனும்
    Can classroom lighting conditions affect your child’s learning?

நம் பள்ளிகளில் மாணவர்களுக்கு பெரும் சவாலாகவுள்ள காரணிகள் எவை தெரியுமா? நீண்ட நேர வகுப்புகளும், மாணர்வர்களின்  கிரகிக்கும் திறனும், கூடவே அவர்களின் பார்வைக்கூர்மையும் ஆகும். ஒரு நாளில் மூன்றில் ஒரு பங்கு நேரத்தை பள்ளிகளில் செலவழிக்கும் குழந்தைகளுக்கு அவர்களின் வகுப்பறைகள் கல்வி கற்க போதுமான சூழலை உருவாக்குகிறதா? இதனை அறிய சென்னையிலுள்ள சங்கர நேத்ராலயா, சண்முகா கலை, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி (SASTRA) பல்கலைக்கழகம், தஞ்சாவூர், மற்றும் இலைட் ஸ்கூல் ஆஃப் ஆப்டோமெட்ரி (Elite School of Optometry)-ஐ சேர்ந்த ஆராய்ச்சிகுழு, சென்னையில் உள்ள ஆறு பள்ளிகளில் சுமார் 29 வகுப்பறைகளை ஆராய்ந்து கண்டறிந்துள்ளனர்.

வகுப்பறையின் வெளிச்சம், சுண்ணாம்பு பல்பத்தின் நிறம், கரும்பலகையில் உள்ள  எழுத்துக்கள் மீது மாணவர்களின் பார்வைக் கோணம், கரும்பலகைக்கும் மாணவர்களுக்கும் இடையே உள்ள தூரம் ஆகியவை பார்வைக்கூர்மையின் தேவையை அளக்க அளவுகோலாக தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்த முறையை மேலும் சரிபார்க்க வகுப்பறை பலகை மற்றும் மாணவரின் இடையினுள்ள தூரத்தை அளந்தனர். இதன்மூலம் மாணவர்கள், எழுத்துக்களை அடையாளம் கண்டுக்கொள்ளும் தூரத்தினை அளந்தனர். மாணவர்களின் கோணத்திலிருந்து வகுப்பறைச்சூழலை அறிய வினாப்பட்டியலும் கொடுக்கப்பட்டது.

ஒரு வகுப்பறையின் தரம் அங்குள்ள வெளிச்சம், ஒலி அளவு, வெப்ப நிலை, கட்டிடத்தின் வயது, இவை அனைத்தையும் சார்ந்தது. அதுவும் வெளிச்சத்தின் அளவிலும், தரத்திலும் குறையிருந்தால், அது மாணவர்களின் கண்களுக்கு கூடுதல் அழுத்தத்தை கொடுக்கும். அது அவர்களின் கிரகிக்கும் திறனையும், செயல் திறனையும் வெகுவாக பாதிக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

ஆய்வின் இறுதியில் 62 சதவீதம் வகுப்பறைகள் சொற்ப வெளிச்சம் கொண்டவையாக அறியப்பட்டது. கரும்பலகைக்கும் நாற்காலிக்கும் இடையிலான தூரத்தை கணக்கிற்குட்படுத்துகையில், முன்வரிசை மாணவர்கள் 23 சதவீத பார்வை அழுத்தத்திற்கும், நடுவரிசை 56 சதவீத பார்வை அழுத்தத்திற்கும்  மற்றும் கடைசி வரிசை மாணவர்கள் 73 சதவீத பார்வை அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள். மாணவர்களில் எட்டு சதவீதத்தினர் வகுப்பறை பலகை தெளிவாகத்தெரிவதில்லை என்றும், பதிமூன்று சதவீதத்தினர் போதுமான வெளிச்சம் இல்லை என்றும் கூறியுள்ளதாக ஆய்வாளர்கள் ஆவணப்படுத்தி உள்ளார்கள். மேலும், இந்த ஆ    ஆய்  ஆய்வின் வகைப்படுத்தல் முறை, சுமார் 54 % மேசையின் மீது போதிய வெளிச்சம் இல்லையென்பதையும், 26 % பலகை பார்வைக்கூச்சத்தை ஏற்படுத்துகிறது என்பதையும் காட்டுகிறது. மற்றும், பள்ளியில் உள்ள ஏனைய வகுப்பறைகளில், ஒன்பது வகுப்பறைகள் கண்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்துபவையாக கண்டறியப்பட்டது.

பள்ளிகளின் இந்த நிலையை மாற்றவேண்டுமெனில், சில ஆராய்ச்சி அடிப்படையிலான தீர்வுகள் செயல்படுத்தப்பட வேண்டும் என்று இந்த ஆய்வு தெளிவுபடுத்துகிறது. அதாவது மேம்படுத்தப்பட்ட இருக்கை அமைப்பு, கண் பார்வை அழுத்தம் ஏற்படாவண்ணம் சுண்ணாம்பு பல்பத்தின் நிறம் ஆகியவை இருக்க வேண்டும், மேலும், திட்டமிட்ட வகுப்பறை மேற்பார்வையிடல், கண் பரிசோதனை வழக்கத்தின் அவசியத்தையும் வலியுறுத்துகிறார்கள்.