முடக்கு வாதம்  (Rheumatoid Arthritis) எனப்படும் நோயானது முதன்முதலில் 19ஆம் நூற்றாண்டில் கண்டறியப்பட்டதாகும். இன்றளவில் உலகின் சுமார் 1-2% மக்களை இந்த நோய் தாக்குகின்றது.  ஓர் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம், நோய் ஏற்படுத்தும் நுண்ணுயிரிகளை விடுத்து, அந்த உடலின் திசுக்களை, குறிப்பாக மூட்டுகளைத் தாக்கி, பாதிப்பு ஏற்படுத்துவதே இந்நோய்க்குக் காரணமாகும்.

News

மும்பை
28 ஏப் 2022

IIT பம்பாய், IIT மெட்ராஸ் மற்றும் IIT ஐதராபாத் முதலிய கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், ஆங்கிலத்திலிருந்து பல இந்திய மொழிகளுக்கு உரையாடலில் இருந்து உரையாடலாக மாற்றும் எந்திரவழி மொழிபெயர்ப்பு அமைப்பை (SSMT) உருவாக்கியுள்ளனர்

பெங்களூரு
7 ஜூன் 2019

காற்று - நாம் உயிர் வாழ முதன்மைத் தேவை. இன்றைய சூழலில், மனித செய்கைகளின் விளைவாக வளிமண்டலம் நச்சு மண்டலமாக மாறி வருகின்றது.  இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகள் சந்திக்கும் மிகப்பெரும் சவால்களில் காற்று மாசுபாடு மிக முக்கியமான ஒன்றாகும்.  உலகில் காற்று மாசுபாடு அதிகமாக இருக்கும் 15 நகரங்களில், 14 நகரங்கள் இந்தியாவிலேயே உள்ளது என்பது வருந்தத்தக்க செய்தியாகும்.

அருணாச்சல பிரதேசம்
6 பிப் 2020

“ஊர்முது வேலிப் பார்நடை வெருகின்
இருட்பகை வெரீஇய நாகுஇளம் பேடை
உயிர்நடுக் குற்றுப் புலாவிட் டரற்ற…”
-326- பருத்திப் பெண்டின் சிறு தீ!

பெங்களூரு
28 நவ 2019

தற்போது பரவலாக இருக்கும் அலோபதி எனும் நவீன மருத்துவம் 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திருந்து தான் பரவலாகி வந்தது. இதற்கு முன்னர், இந்தியா உட்பட பல ஆசிய நாடுகளில் பாரம்பரிய மருத்துவ முறைகளே வழக்கத்தில் இருந்தன.  தனியாக பிரிக்கப்பட்ட  வேதியல் மூலக்கூறுகளைக் கொண்டு நோயின் அறிகுறிகளுக்கேற்ப சிகச்சைகள் செய்வதே அலோபதி மருத்துவ முறை. அலோபதி மருத்துவத்தில் பொதுவாக சொல்லப்படும் குறைபாடுகளில் ஒன்று அதன் பக்கவிளைவுகள். இதனால் இன்று உலகெங்கிலும் உள்ள பல ஆய்வாளர்கள் பாரம்பரிய மருத்துவ முறைகளை இன்றைய வழக்கில் கொண்டு வருவத்திற்கான ஆய்வுகளை முன்னெடுத்து வருகின்றனர்.

சென்னை
23 ஆக 2019

நம் பள்ளிகளில் மாணவர்களுக்கு பெரும் சவாலாகவுள்ள காரணிகள் எவை தெரியுமா? நீண்ட நேர வகுப்புகளும், மாணர்வர்களின்  கிரகிக்கும் திறனும், கூடவே அவர்களின் பார்வைக்கூர்மையும் ஆகும். ஒரு நாளில் மூன்றில் ஒரு பங்கு நேரத்தை பள்ளிகளில் செலவழிக்கும் குழந்தைகளுக்கு அவர்களின் வகுப்பறைகள் கல்வி கற்க போதுமான சூழலை உருவாக்குகிறதா?

கேரளா
14 ஆக 2019

தன் நீலநிறப்பூக்களால் மலையினை நீலப்போர்வையால் போர்த்தி, நீலகிரி மலை எனப்பெயர் பெற வைத்த அதிசய தாவரம் நீலக்குறிஞ்சி. ஸ்ட்ரோபிலன்தஸ் குந்தியானஸ் (Strobilanthes kunthianus) என்ற அறிவியல்  பெயரால் அறியப்படும் இவ்வகை குறிஞ்சி, பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு  ஒரு முறை மட்டுமே மலரும் தன்மையுடையதாகும், ஸ்ட்ரோபிலன்தஸ் என்ற இத்தாவரபேரினத்தில் சுமார் 350 வகை சிற்றினங்கள் உள்ளடங்கியுள்ளது. சென்ற வருடம் மேற்குத்தொடர்ச்சிமலைகளில் மலர்ந்து அனைவரையும் கவர்ந்த குறிஞ்சி மலர்கள், தமிழகம் மற்றும் கேரள  ஆராய்ச்சியாளர்கள் புது வகைகளை கண்டுபிடிக்க உறுதுணையானது.

ஸ்ரீநகர்
20 ஜூன் 2019

பரந்து விரிந்த இந்தியா தீபகற்பத்தின் மேற்குப் பரப்பில், அழகிய மலைத் தொடர்களின் அணிவகுப்பாக இருக்கும் மேற்குத் தொடர்ச்சி மலை உலகின்  பல்லுயிரியற் காடுகளில் மிக முக்கியமான ஒன்றாகும். உலகில் அச்சுறுத்தப்பட்ட இனங்களில், சுமார் 325 உயிரினங்கள் மேற்குத் தொடர்ச்சி மலையில் காணப்படுகின்றன. அவற்றில் பல உயிரினங்கள் வேறெங்கும் காணப்படாது இந்த நிலவியல் அமைப்புக்கு மட்டுமே உரித்தான அகணிய உயிரிகளாகும் (Endemic organisms).  அகணிய உயிர்கள், உட்பிரதேசத்திற்குரிய உயிரி என்றும் அழைக்கப்படுகிறது.