முடக்கு வாதம்  (Rheumatoid Arthritis) எனப்படும் நோயானது முதன்முதலில் 19ஆம் நூற்றாண்டில் கண்டறியப்பட்டதாகும். இன்றளவில் உலகின் சுமார் 1-2% மக்களை இந்த நோய் தாக்குகின்றது.  ஓர் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம், நோய் ஏற்படுத்தும் நுண்ணுயிரிகளை விடுத்து, அந்த உடலின் திசுக்களை, குறிப்பாக மூட்டுகளைத் தாக்கி, பாதிப்பு ஏற்படுத்துவதே இந்நோய்க்குக் காரணமாகும்.

Language

நெதர்லாந்து
14 ஏப் 2019

பல்வேறு கலாச்சாரங்களைக்கொண்டு பன்முகத்தன்மையுடன் விளங்கும் ஒரு தேசம் இந்தியா. இங்கே பேசப்படும் எண்ணற்ற மொழிகளே இதற்கு சான்றாக திகழ்கிறது. இந்தியாவில் வழக்கிலிருக்கும் மொழிகளை கற்பது உற்சாகமூட்டும் ஒரு செயலாக இருந்தாலும், இந்திய துணைக் கண்டத்தில், இந்தோ-ஆரிய மொழிகளின் வருகைக்கு முன், அதாவது கி.மு 1500ஆம் ஆண்டுக்கு முன்னிருந்தே வாழ்ந்து வரும் திராவிடர்களின் வரலாற்றை புரிந்துகொள்ள முக்கிய காரணிகளாக இந்தியாவின் மொழிகள் திகழ்கின்றன. இந்தியாவில் திராவிடர்களின் தோற்றம் மற்றும் பரவல்குறித்த வரலாறு இன்றும் முழுதாக அறியப்படாமலே உள்ளது.