முடக்கு வாதம்  (Rheumatoid Arthritis) எனப்படும் நோயானது முதன்முதலில் 19ஆம் நூற்றாண்டில் கண்டறியப்பட்டதாகும். இன்றளவில் உலகின் சுமார் 1-2% மக்களை இந்த நோய் தாக்குகின்றது.  ஓர் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம், நோய் ஏற்படுத்தும் நுண்ணுயிரிகளை விடுத்து, அந்த உடலின் திசுக்களை, குறிப்பாக மூட்டுகளைத் தாக்கி, பாதிப்பு ஏற்படுத்துவதே இந்நோய்க்குக் காரணமாகும்.

nutrition

Mumbai
3 செப் 2021

ஒரு நபரின் உணவில் போதுமான அளவு ஊட்டச்சத்து மற்றும் உயிர்ச்சத்துக்கள் இல்லாதபோது ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுகிறது. குழந்தைப் பருவத்திலிருந்தே தொடங்கும் இது, இந்தியாவின் பெரும் சுகாதார நெருக்கடியாகும். ஊட்டச்சத்து குறைபாடு, புறக்கணிக்கப்பட்டால், குழந்தைகளின் உடல், மனவளர்ச்சிக் குறைபாடு, உடல் எடை  குறைபாடு, மற்றும் உயிரிழப்பிற்குக்கூட வழிவகுக்கும்.