சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னையின் கடற்கரைகளில் இருளின் இடையே கடல்நீரின்மேல் நீல ஒளியுடனான ஒரு போர்வை படர்ந்ததுபோன்ற ஒரு அழகிய காட்சியை மக்கள் கண்டனர். இது நாக்டிலுகா (Noctiluca) என்னும் ஈர்கசைவாழி (Dinoflagellates) வகையைச் சேர்ந்த மிதவைப் பாசிகளின் பெருக்கால் ஏற்பட்ட பாசித்திரளின் விளைவாகும்.