கொண்டைக்கடலை (Chickpea) என்றாலே நம்மில் பலருக்கு நினைவில் வருவதுச் கோவிலில் கொடுக்கப்படும் சுண்டல் தான். ஒவ்வொரு வருடமும், கொண்டைக்கடலையின் விளைச்சல் பெருகி வருவதற்கு ‘உழவர்களின்’ கடும் உழைப்பு, ஒரு முக்கிய காரணம் என்று நாம் நன்கு அறிவோம். ஒரு தாழ்மையான ‘பற்றுயிரி’யும் (Bacteria) இதற்கு காரணம் என்றால் நம்ப முடிகிறதா? உண்மைதான்! ‘ரைசோபியம்’ (Rhizobium) என அழைக்கப்படும் ‘வேர்-முடிச்சு நுண்ணுயிரி’ - இயற்கை உரமாக செயல்பட்டு கொண்டைக்கடலையின் விளைச்சலைக் கூட்டுகிறது. இதனால், சுற்றுப்புறத்திற்கு தீங்கு விளைவிக்கும் இரசாயன உரங்களின் தேவை, இல்லாமல் போகிறது.