கண்கவர் வண்ணங்கள், வியத்தகு வடிவங்கள், திடமான நறுமணம் என பல இயல்புகள் மூலம் மலர்கள் தங்களின் மகரந்தச்சேர்க்கையாளர்களை ஈர்க்கின்றன. சொல்லப்போனால், தேனீக்கள், வண்ணத்துப்பூச்சிகள் மற்றும் இதர மகரந்தச்சேர்க்கை செய்யும் பூச்சிகள் தங்களுக்கென ஒரு விருப்பப்பட்டியலை வைத்து மலர்களைத் தேர்ந்தெடுத்துச் செல்லும் திறன் கொண்டவை என்பதை ஆய்வுகள் தெளிவுபடுத்தியுள்ளன. இந்த மலர்த்தேர்வு விருப்பங்கள் சூழ்நிலை மாற்றங்களுக்கேற்ப மாற்றிக்கொள்ளக்கூடியவை என்பது கூடுதல் தகவல்.
Ecology
ஆய்வாளர்கள் யானைகளின் வாலின் மயிரிழைகளில் உள்ள இயக்குநீரினைக் கொண்டு அவற்றின் மனஅழுத்த நிலையைக் கண்டறிந்துள்ளனர்.
மின் வாகனங்கள் வன ஊர்தி போது விலங்குகளுக்குள் ஊடுருவது குறைந்துள்ளன என்று ஒரு ஆய்வு கண்டறிந்துள்ளது
மதுரையின் வரலாற்றுச் சிறப்புமிக்க நீர்நிலை அமைப்பை உயிர்ப்பிக்க அவசரக் கொள்கை மாற்றத்துக்கான அழைப்பு
இந்திய தொழில்நுட்ப நிறுவனம், பம்பாய் (IIT B) ஐ சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மதுரையின் வரலாற்றுச் சிறப்புமிக்க நீர்நிலை அமைப்பை மீட்டெடுப்பதன் மூலம் மண்டலத்தின் தண்ணீர் பிரச்சனைகளைத் தீர்க்க அழைக்கின்றனர்
வெண்முதுகுப் பாறு என்பது உலகெங்கிலும் அதிகம் காணப்பட்ட கழுகு இனத்தைச் சேர்ந்த ஒரு வேட்டைப் பறவையாகும். இந்த பறவை தற்போது இந்திய துணைக்கண்டம் மற்றும் தெற்காசிய பகுதிகளில் மட்டும் வாழ்ந்து வரும் ஒரு அருகிய நிலையில் உள்ள இனமாகும். கால்நடைகளுக்கு புகட்டப்படும் டைக்லோபினாக் (Diclofenac) எனும் மருந்தினால், அவைகளின் எண்ணிக்கை கடந்த முப்பது ஆண்டுகளாக குறைந்து வருகின்றது. டைக்லோபினாக் மருந்து புகட்டப்பட்ட கால்நடைகளின் உடல்களை, இந்த பறவைகள் உண்ணும்போது மூட்டு நோய் மற்றும் வாதம் போன்ற உறுப்பு செயலிழப்பு நோய்களின் தாக்கத்தால் இப்பறவைகள் இறந்துவிடுகின்றன.
நிழற்படம்: சாகர் கோசாவி
“நாராய் நாராய் செங்கால் நாராய்
பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன
பவளக் கூர்வாய் செங்கால் நாராய்
நீயும் நின் பெடையும், தென் திசைக் குமரியாடி
வடதிசைக்கு ஏகுவீராயின்………..”
-நாரைவிடு தூது
1300 பறவை இனங்களுடன், இந்தியா பறவைகள் பல்லுயிரியலில் உலகின் தலைசிறந்த பத்து நாடுகளில் ஒன்றாக உள்ளது. நீங்கள் ஏதேனும் ஒரு இந்தியப்பெரு நகரங்களில் பிறந்து வளர்ந்திருந்தால், காகங்கள் அல்லது புறாக்கள் தவிர மற்றைய பறவையினங்களை கண்டிருக்கும் வாய்ப்புகள் குறைவே.
சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னையின் கடற்கரைகளில் இருளின் இடையே கடல்நீரின்மேல் நீல ஒளியுடனான ஒரு போர்வை படர்ந்ததுபோன்ற ஒரு அழகிய காட்சியை மக்கள் கண்டனர். இது நாக்டிலுகா (Noctiluca) என்னும் ஈர்கசைவாழி (Dinoflagellates) வகையைச் சேர்ந்த மிதவைப் பாசிகளின் பெருக்கால் ஏற்பட்ட பாசித்திரளின் விளைவாகும்.