ஆஸ்திரேலியாவின் கிறிஸ்துமஸ் தீவுகளில் பிற இடங்களைப்போல் விலங்குகள்-கடக்கும் பாதைகள் உள்ளன. ஆனால், அங்கே அந்தப் பாதைகளைக் கடப்பது எச்சரிக்கை பலகைகளை வாசித்துவிட்டு சாதாரணமாக கடந்துசெல்லக்கூடிய எளிதான காரியம் இல்லை. மாறாக, போக்குவரத்து சீரமைப்பு, பொது அறிவுப்புகள், நிரந்தர பாலங்கள் என பல ஏற்பாடுகள் தேவை! இது அங்கே கூட்டமாகச் சாலைகளைக் கடந்து செல்லக்கூடிய நண்டுகளை வழியனுப்ப மேற்கொள்ளப்படும் ஏற்பாடுகள். இந்தக் கண்கவர் நிகழ்வு வருடந்தோறும் நிகழும் ஓர் இயற்கையின் விந்தையாகும்.