முடக்கு வாதம்  (Rheumatoid Arthritis) எனப்படும் நோயானது முதன்முதலில் 19ஆம் நூற்றாண்டில் கண்டறியப்பட்டதாகும். இன்றளவில் உலகின் சுமார் 1-2% மக்களை இந்த நோய் தாக்குகின்றது.  ஓர் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம், நோய் ஏற்படுத்தும் நுண்ணுயிரிகளை விடுத்து, அந்த உடலின் திசுக்களை, குறிப்பாக மூட்டுகளைத் தாக்கி, பாதிப்பு ஏற்படுத்துவதே இந்நோய்க்குக் காரணமாகும்.

Ecology

2 மே 2019

மேற்கு தொடர்ச்சி மலை - அதனுடைய மெய்சிலிர்க்கும் அழகிற்கும், உயரமான மலைகளுக்கும், அடர்ந்த வனங்களுக்கும் மற்றும் அதன் விரிந்த புல்வெளிக்காடுகளுக்கும் பெயர்பெற்றது. பல்வேறு ஆய்வுகள் இவ்வகை இயற்கை காடுகள் மனித செயல்பாட்டினால் மாற்றங்களுக்கு உட்பட்டு அதனால் ஏற்பட்ட சுற்றுசூழலியல் மாற்றங்கள் மற்றும் நிலச்சரிவு, வெள்ளம் முதலிய அழிவுகளுக்கு ஆட்படுவதையும் விளக்கியுள்ளன.

திருவனந்தபுரம்
14 ஏப் 2019

தாவரக்குடும்பங்கள் தங்களுக்குள் பல்லாயிரக்கணக்கான விந்தைகளை புதைத்து வைத்திருப்பதை நாம் பலநேரங்களில் உணருவதில்லை. இதற்கு புலாலுண்ணித்தாவரங்கள் ஒரு வியக்கத்தக்க எடுத்துக்காட்டு. இவ்வகைத்தாவரங்கள், பிற உயிரிகளை -  பெரும்பாலும் பூச்சிகளை உண்ணக்கூடியவையாகும். உலகத்திலுள்ள நான்கு லட்ச தாவர வகைகளில், சுமார் ஆயிரம் வகைகள், புலாலுண்ணும் தாவரங்களாக உள்ளன. இவை ஊட்டச்சத்து குறைந்த மண்பரப்புகளில் வாழுவதால் தங்களுக்கு தேவையான சத்துக்களை பூச்சிகள் மற்றும் பிற முதுகெலும்பற்ற சிற்றுயிரிகளிடமிருந்து பெறுகின்றன.  

கோட்டயம்
14 ஏப் 2019

மண்ணில் உள்ள கரிமவளத்தினை பொறுத்தே மண்வளம் கணிக்கப்படுகிறது. மண்ணில் உள்ள நுண்சத்துகள் தாவர வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகின்றன. மண்புழுக்கள் மண்ணில் நுண்சத்துக்கள் மற்றும் மண்வளம் பெருகுவதற்கு வழிவகை செய்கின்றன. கோட்டயம் மகாத்மா காந்தி பல்கலைக்கழகம், சுற்றுசூழலியல் துறை பேராசிரியர் ஈ.வி. ராமசாமி மற்றும் ஆய்வாளர் எஸ். என். ஸ்ருதி அவர்களின் சமீபத்திய ஆய்வில் மண்புழுவின் உயிரியற்பல்வகைமை மண்ணின் கரிமவளத்தினை அதிகப்படுத்துவதாக கண்டறிந்துள்ளனர்.