முடக்கு வாதம்  (Rheumatoid Arthritis) எனப்படும் நோயானது முதன்முதலில் 19ஆம் நூற்றாண்டில் கண்டறியப்பட்டதாகும். இன்றளவில் உலகின் சுமார் 1-2% மக்களை இந்த நோய் தாக்குகின்றது.  ஓர் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம், நோய் ஏற்படுத்தும் நுண்ணுயிரிகளை விடுத்து, அந்த உடலின் திசுக்களை, குறிப்பாக மூட்டுகளைத் தாக்கி, பாதிப்பு ஏற்படுத்துவதே இந்நோய்க்குக் காரணமாகும்.

இந்தியாவில் காணப்படும் ஒரு வகை வீட்டுப்பல்லியான ஹெமிடாக்டிலஸின் (Hemidactylus Geckos) பரிணாம வளர்ச்சியையும் பல்வகைமையடைதல் நிலையையும் பற்றி ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்துள்ளனர்.

Read time: 1 min

கொண்டைக்கடலை (Chickpea) என்றாலே நம்மில் பலருக்கு நினைவில் வருவதுச் கோவிலில் கொடுக்கப்படும் சுண்டல் தான். ஒவ்வொரு வருடமும், கொண்டைக்கடலையின் விளைச்சல் பெருகி வருவதற்கு ‘உழவர்களின்’ கடும் உழைப்பு, ஒரு முக்கிய காரணம் என்று நாம் நன்கு அறிவோம். ஒரு தாழ்மையான ‘பற்றுயிரி’யும்  (Bacteria) இதற்கு காரணம் என்றால் நம்ப முடிகிறதா? உண்மைதான்! ‘ரைசோபியம்’ (Rhizobium) என அழைக்கப்படும் ‘வேர்-முடிச்சு  நுண்ணுயிரி’ - இயற்கை உரமாக  செயல்பட்டு கொண்டைக்கடலையின் விளைச்சலைக் கூட்டுகிறது. இதனால், சுற்றுப்புறத்திற்கு தீங்கு விளைவிக்கும் இரசாயன உரங்களின் தேவை, இல்லாமல் போகிறது.

Read time: 1 min

உலகெங்கும் குழந்தைகள் மத்தியில் மிகவும் பிரபலமான மாயா நாவலான “ஆரி பாட்டரில்” பாம்புகளிடம் பேசக்கூடிய சக்தி கொண்ட ஒரு மாயாவி தான் சாலசார் சிலைத்தரின். தற்போது இந்த கதாப்பாத்திரம் நம் இந்திய பல்லுயிரிகளின் பட்டியலிலும் தன் பெயரை பதித்துள்ளது. ஆம், சமீபத்தில் அருணாச்சல பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு புதிய குழிவிரியன் வகை பாம்பிற்கு  சாலசாரின் குழிவிரியன் (Salazar’s pit viper) என பெயரிட்டுள்ளனர் ஆய்வாளர்கள் “நானும் இவ்வாய்வை மேற்கொண்ட இன்னும் இரு ஆய்வாளர்களும் ஹாரி பாட்டரின் தீவிர ரசிகர்கள்.  ஹாரிபாட்டர் உலகத்தை நமக்கு அறிமுகப்படுத்திய அதன் ஆசிரியர் ஜே.கே.

Read time: 1 min

ஓங்கி உயர்ந்த மலைகளிற்கிடையே, பரந்து விரிந்த புல்வெளிகளால் நிரம்பிய ஒரு வனப்பகுதி! இந்த வர்ணனை,  திரைப்படங்களில் வரும் ரம்மியமான ஒரு காதல் பாடலை படமாக்க சிறந்த இடம் போல தோன்றலாம்.  ஆனால், புல்வெளிகளுடன் கூடிய இதுபோன்ற ரம்மியமான நிலப்பரப்புகள் மலை உச்சிகளில் அமைந்திருப்பதை சங்கப்புலவர்கள் பலநூறு ஆண்டுகளுக்கு முன்னரே ஆவணப்படுத்தியதோடு தங்களின் இலக்கியங்களில்  உவமைகளாகவும் பயன்படுத்தியுள்ளனர்.

Read time: 1 min

“ஊர்முது வேலிப் பார்நடை வெருகின்
இருட்பகை வெரீஇய நாகுஇளம் பேடை
உயிர்நடுக் குற்றுப் புலாவிட் டரற்ற…”
-326- பருத்திப் பெண்டின் சிறு தீ!

Read time: 1 min

நமது பூமியில் ஒவ்வொரு நாளும் சராசரியாக ஐந்து நிலநடுக்கங்கள்,  5.0 அல்லது அதற்கும் மேற்பட்ட ரிக்டர் அளவில் நிகழ்கின்றன. நிலநடுக்கங்கள் அவற்றின் மூலமாக மட்டுமல்லாமல் சுனாமி போன்ற நிலநடுக்கத்திற்க்கு தொடர்புடைய சில இயற்கை பேரிடர்களால் பேரழிவினை உண்டாக்குகின்றன. பொதுவாக நிலநடுக்கத்தால் உண்டாகும் சேதம் என்பது அதன் தீவிரம் மற்றும் அதன் மையப்பகுதியிலிருந்து நிலநடுக்கம் உண்டாகும் நிலப்பரப்பின் தூரத்தினைப் பொறுத்தது.

Read time: 1 min

வலி என்பது உடலில் ஏற்படும் வேதனையளிக்கும் உணர்வு. நமது தினசரி அலுவல்களில் வலிகள் தவிர்க்க முடியாதவை. சிறு காயங்கள் மற்றும் விபத்துகளால் ஏற்படும்  வலிகளானது சில மணித்துளிகள் முதல் பல  நாட்கள் வரை  நீடிக்கக்கூடியவை. சிகிச்சைகளின் காலம் முடிந்தாலும், சில நேரங்களில் வலிகள் நாட்பட்ட வலிகளாக பல ஆண்டுகள் கூட நீடிப்பதுண்டு. இந்த நாட்பட்ட வலிகள் என்பவை மிகவும் துயர் நிறைந்தவை. உலகெங்கிலும் நாட்பட்ட வலிகளின் சிகிச்சைக்காக வருடத்திற்கு பல கோடி ருபாய்கள் செலவிடப்படுகின்றன., நரம்புகளில் ஏற்படும் சேதங்களால் வரும் தொடர்ச்சியான நரம்பு வலிகள்  நாட்பட்ட வலிகளில் ஒன்றாகும்.

Read time: 1 min