வெண்முதுகுப் பாறு என்பது உலகெங்கிலும் அதிகம் காணப்பட்ட கழுகு இனத்தைச் சேர்ந்த ஒரு வேட்டைப் பறவையாகும். இந்த பறவை தற்போது இந்திய துணைக்கண்டம் மற்றும் தெற்காசிய பகுதிகளில் மட்டும் வாழ்ந்து வரும் ஒரு அருகிய நிலையில் உள்ள இனமாகும். கால்நடைகளுக்கு புகட்டப்படும் டைக்லோபினாக் (Diclofenac) எனும் மருந்தினால், அவைகளின் எண்ணிக்கை கடந்த முப்பது ஆண்டுகளாக குறைந்து வருகின்றது. டைக்லோபினாக் மருந்து புகட்டப்பட்ட கால்நடைகளின் உடல்களை, இந்த பறவைகள் உண்ணும்போது மூட்டு நோய் மற்றும் வாதம் போன்ற உறுப்பு செயலிழப்பு நோய்களின் தாக்கத்தால் இப்பறவைகள் இறந்துவிடுகின்றன.