“வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்
மந்திசிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்”
-54:1 குற்றாலக்குறவஞ்சி
(குறத்தி மலைவளங்கூறுதல்)
என குற்றால மலையின் அழகை விவரிக்கும் போது ஆண் குரங்குகள் (வானரம்) பெண் குரங்குகளிடம் (மந்தி) கனிகளைக்கொடுத்து சைகைகள் மூலம் கொஞ்சி விளையாடும் அழகிய காட்சியினை “குற்றாலக் குறவஞ்சியில்” 18ஆம் நூற்றாண்டிலேயே ஆவணப்படுத்தியுள்ளார் திரிக்கூடராசப்பக்கவிராயர்.