கண்கவர் வண்ணங்கள், வியத்தகு வடிவங்கள், திடமான நறுமணம் என பல இயல்புகள் மூலம் மலர்கள் தங்களின் மகரந்தச்சேர்க்கையாளர்களை ஈர்க்கின்றன. சொல்லப்போனால், தேனீக்கள், வண்ணத்துப்பூச்சிகள் மற்றும் இதர மகரந்தச்சேர்க்கை செய்யும் பூச்சிகள் தங்களுக்கென ஒரு விருப்பப்பட்டியலை வைத்து மலர்களைத் தேர்ந்தெடுத்துச் செல்லும் திறன் கொண்டவை என்பதை ஆய்வுகள் தெளிவுபடுத்தியுள்ளன. இந்த மலர்த்தேர்வு விருப்பங்கள் சூழ்நிலை மாற்றங்களுக்கேற்ப மாற்றிக்கொள்ளக்கூடியவை என்பது கூடுதல் தகவல்.
முடக்கு வாதம் (Rheumatoid Arthritis) எனப்படும் நோயானது முதன்முதலில் 19ஆம் நூற்றாண்டில் கண்டறியப்பட்டதாகும். இன்றளவில் உலகின் சுமார் 1-2% மக்களை இந்த நோய் தாக்குகின்றது. ஓர் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம், நோய் ஏற்படுத்தும் நுண்ணுயிரிகளை விடுத்து, அந்த உடலின் திசுக்களை, குறிப்பாக மூட்டுகளைத் தாக்கி, பாதிப்பு ஏற்படுத்துவதே இந்நோய்க்குக் காரணமாகும்.
Bengaluru/ ஜூலை 1, 2022