மேற்கு தொடர்ச்சி மலை - அதனுடைய மெய்சிலிர்க்கும் அழகிற்கும், உயரமான மலைகளுக்கும், அடர்ந்த வனங்களுக்கும் மற்றும் அதன் விரிந்த புல்வெளிக்காடுகளுக்கும் பெயர்பெற்றது. பல்வேறு ஆய்வுகள் இவ்வகை இயற்கை காடுகள் மனித செயல்பாட்டினால் மாற்றங்களுக்கு உட்பட்டு அதனால் ஏற்பட்ட சுற்றுசூழலியல் மாற்றங்கள் மற்றும் நிலச்சரிவு, வெள்ளம் முதலிய அழிவுகளுக்கு ஆட்படுவதையும் விளக்கியுள்ளன.
முடக்கு வாதம் (Rheumatoid Arthritis) எனப்படும் நோயானது முதன்முதலில் 19ஆம் நூற்றாண்டில் கண்டறியப்பட்டதாகும். இன்றளவில் உலகின் சுமார் 1-2% மக்களை இந்த நோய் தாக்குகின்றது. ஓர் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம், நோய் ஏற்படுத்தும் நுண்ணுயிரிகளை விடுத்து, அந்த உடலின் திசுக்களை, குறிப்பாக மூட்டுகளைத் தாக்கி, பாதிப்பு ஏற்படுத்துவதே இந்நோய்க்குக் காரணமாகும்.
Bengaluru/ ஜூலை 1, 2022