முடக்கு வாதம்  (Rheumatoid Arthritis) எனப்படும் நோயானது முதன்முதலில் 19ஆம் நூற்றாண்டில் கண்டறியப்பட்டதாகும். இன்றளவில் உலகின் சுமார் 1-2% மக்களை இந்த நோய் தாக்குகின்றது.  ஓர் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம், நோய் ஏற்படுத்தும் நுண்ணுயிரிகளை விடுத்து, அந்த உடலின் திசுக்களை, குறிப்பாக மூட்டுகளைத் தாக்கி, பாதிப்பு ஏற்படுத்துவதே இந்நோய்க்குக் காரணமாகும்.

Health

பெங்களூரு
28 நவ 2019

தற்போது பரவலாக இருக்கும் அலோபதி எனும் நவீன மருத்துவம் 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திருந்து தான் பரவலாகி வந்தது. இதற்கு முன்னர், இந்தியா உட்பட பல ஆசிய நாடுகளில் பாரம்பரிய மருத்துவ முறைகளே வழக்கத்தில் இருந்தன.  தனியாக பிரிக்கப்பட்ட  வேதியல் மூலக்கூறுகளைக் கொண்டு நோயின் அறிகுறிகளுக்கேற்ப சிகச்சைகள் செய்வதே அலோபதி மருத்துவ முறை. அலோபதி மருத்துவத்தில் பொதுவாக சொல்லப்படும் குறைபாடுகளில் ஒன்று அதன் பக்கவிளைவுகள். இதனால் இன்று உலகெங்கிலும் உள்ள பல ஆய்வாளர்கள் பாரம்பரிய மருத்துவ முறைகளை இன்றைய வழக்கில் கொண்டு வருவத்திற்கான ஆய்வுகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மும்பை
30 செப் 2019

மீநுண் தொழில்நுட்பம் எனப்படும் “நானோ தொழில்நுட்பம்” இன்று அறிவியலில் மிகப்பெரும் மாற்றத்தினை உண்டாக்கி வருகின்றது. மூலக்கூறு அளவிலும் கூட பருப்பொருட்களை கையாளும் தொழில்நுட்பமே மீநுண் தொழில்நுட்பம். மீநுண் துகள்கள் கரிமம் சார்ந்த மற்றும் சாராதவை என இரு வகைகளில் உள்ளன, இவைகள் மிக நுண்ணிய அளவினைக் கொண்டதாகும். இப்படிப்பட்ட மீநுண் பொருட்களை, அகச்சிவப்பு ஒளியின் (Infrared light) உதவியுடன் புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட முடியும் என ஆய்வில் தெரிய வந்துள்ளது. இவ்வகை மீநுண் தொழில்நுட்பம் தற்போது புற்றுநோய் சிகிச்சையில்  புதிய நம்பிக்கையினை விதைத்துள்ளது.

சென்னை
23 ஆக 2019

நம் பள்ளிகளில் மாணவர்களுக்கு பெரும் சவாலாகவுள்ள காரணிகள் எவை தெரியுமா? நீண்ட நேர வகுப்புகளும், மாணர்வர்களின்  கிரகிக்கும் திறனும், கூடவே அவர்களின் பார்வைக்கூர்மையும் ஆகும். ஒரு நாளில் மூன்றில் ஒரு பங்கு நேரத்தை பள்ளிகளில் செலவழிக்கும் குழந்தைகளுக்கு அவர்களின் வகுப்பறைகள் கல்வி கற்க போதுமான சூழலை உருவாக்குகிறதா?

25 ஏப் 2019

இந்தியாவில், பருவமழைக் காலம் வெயில் காலத்தின் முடிவு மட்டுமல்ல, அது பல்வேறு நோய் தொற்றுக்கான காலமும் கூட. நூறு கோடிக்கும் அதிகமாக இருக்கும் இந்திய மக்கள் தொகையில்,  பொது சுகாதாரம் மற்றும் பொருளாதாரத்திற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் தொற்றுநோய்களை கட்டுப்படுத்துவது என்பது இன்றளவில் மிகப்பெரும் சவாலாக உள்ளது. டெங்கி காய்ச்சல் எனப்படும் முடக்குங்காய்ச்சல் - கொசுக்களால் பரப்பப்படும் தொற்றுநோய். ஒவ்வொரு வருடமும் இந்நோய் மக்களிடம் மிகப்பெரும் தாக்கத்தினை ஏற்படுத்துகின்றது.