முடக்கு வாதம்  (Rheumatoid Arthritis) எனப்படும் நோயானது முதன்முதலில் 19ஆம் நூற்றாண்டில் கண்டறியப்பட்டதாகும். இன்றளவில் உலகின் சுமார் 1-2% மக்களை இந்த நோய் தாக்குகின்றது.  ஓர் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம், நோய் ஏற்படுத்தும் நுண்ணுயிரிகளை விடுத்து, அந்த உடலின் திசுக்களை, குறிப்பாக மூட்டுகளைத் தாக்கி, பாதிப்பு ஏற்படுத்துவதே இந்நோய்க்குக் காரணமாகும்.

Ecology

Bengaluru
26 நவ 2020

“ஒற்றை மரம் தோப்பாகாது என்ற பழமொழிப் போல் ஒற்றை இனத் தோட்டமும் காடாகாது”

Dharwad
15 அக் 2020

பார்ப்பதற்கு சற்று வித்தியாசமான கிழக்குத் தொடர்ச்சிமலை புதர்த் தவளை ஒன்றை மேற்குத் தொடர்ச்சிமலையில் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். 

Chennai
24 செப் 2020

சென்னையின் கோவளம் கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்ட டெட்ராஸ்டேமா ப்ரியே நாடாப் புழு (படம்: மோகன்தாஸ் S. விக்னேஷ்)

பெங்களூரு
31 ஆக 2020

இந்தியாவில் காணப்படும் ஒரு வகை வீட்டுப்பல்லியான ஹெமிடாக்டிலஸின் (Hemidactylus Geckos) பரிணாம வளர்ச்சியையும் பல்வகைமையடைதல் நிலையையும் பற்றி ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்துள்ளனர்.

பெங்களூரு
12 ஜூன் 2020

உலகெங்கும் குழந்தைகள் மத்தியில் மிகவும் பிரபலமான மாயா நாவலான “ஆரி பாட்டரில்” பாம்புகளிடம் பேசக்கூடிய சக்தி கொண்ட ஒரு மாயாவி தான் சாலசார் சிலைத்தரின். தற்போது இந்த கதாப்பாத்திரம் நம் இந்திய பல்லுயிரிகளின் பட்டியலிலும் தன் பெயரை பதித்துள்ளது. ஆம், சமீபத்தில் அருணாச்சல பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு புதிய குழிவிரியன் வகை பாம்பிற்கு  சாலசாரின் குழிவிரியன் (Salazar’s pit viper) என பெயரிட்டுள்ளனர் ஆய்வாளர்கள் “நானும் இவ்வாய்வை மேற்கொண்ட இன்னும் இரு ஆய்வாளர்களும் ஹாரி பாட்டரின் தீவிர ரசிகர்கள்.  ஹாரிபாட்டர் உலகத்தை நமக்கு அறிமுகப்படுத்திய அதன் ஆசிரியர் ஜே.கே.

பெங்களூரு
24 ஏப் 2020

ஓங்கி உயர்ந்த மலைகளிற்கிடையே, பரந்து விரிந்த புல்வெளிகளால் நிரம்பிய ஒரு வனப்பகுதி! இந்த வர்ணனை,  திரைப்படங்களில் வரும் ரம்மியமான ஒரு காதல் பாடலை படமாக்க சிறந்த இடம் போல தோன்றலாம்.  ஆனால், புல்வெளிகளுடன் கூடிய இதுபோன்ற ரம்மியமான நிலப்பரப்புகள் மலை உச்சிகளில் அமைந்திருப்பதை சங்கப்புலவர்கள் பலநூறு ஆண்டுகளுக்கு முன்னரே ஆவணப்படுத்தியதோடு தங்களின் இலக்கியங்களில்  உவமைகளாகவும் பயன்படுத்தியுள்ளனர்.

Bengaluru
21 பிப் 2020

“மூங்கா வெருகெலி மூவரி யணிலொ
டாங்கவை நான்குங் குட்டிக் குரிய..”
550 (பொருளதிகாரம் - மரபியல்)

அருணாச்சல பிரதேசம்
6 பிப் 2020

“ஊர்முது வேலிப் பார்நடை வெருகின்
இருட்பகை வெரீஇய நாகுஇளம் பேடை
உயிர்நடுக் குற்றுப் புலாவிட் டரற்ற…”
-326- பருத்திப் பெண்டின் சிறு தீ!

கொல்கத்தா
19 டிச 2019

கடந்த 2019 பிப்ரவரி மாதம், மேற்கு வங்கத்தின் ஜார்கிராம் மாவட்டத்திலுள்ள மூன்று கிராமங்களைச் சேர்ந்த எட்டு நபர்களை ஓநாய் ஒன்று தாக்கியதால், அப்பகுதி மக்கள் பீதி அடைந்தனர். இதைப் போல், பக்கத்து கிராமத்தில் குளிர்காய்ந்துக் கொண்டிருந்த மூன்று நபர்களை ஒரு ஓநாய் தாக்கியதையும், அதில் ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார் என்பதையும் உள்ளூர் நாளிதழ் ஒன்று ஆவணப்படுத்தியுள்ளது. தொடர்ந்து அதிகரித்துவரும் இதுபோன்ற ஓநாய் தாக்குதல் சம்பவங்கள், வயல்களில் வேலை செய்யும் அப்பகுதி மக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியன.

பெங்களூரு
21 நவ 2019

“வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்
மந்திசிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்”
-54:1 குற்றாலக்குறவஞ்சி
(குறத்தி மலைவளங்கூறுதல்)

என குற்றால மலையின் அழகை விவரிக்கும் போது ஆண் குரங்குகள் (வானரம்) பெண் குரங்குகளிடம் (மந்தி) கனிகளைக்கொடுத்து  சைகைகள் மூலம் கொஞ்சி விளையாடும் அழகிய காட்சியினை “குற்றாலக் குறவஞ்சியில்” 18ஆம் நூற்றாண்டிலேயே ஆவணப்படுத்தியுள்ளார்  திரிக்கூடராசப்பக்கவிராயர்.