இந்தியா சுமார் 270 வகை பாம்பினங்களுக்கு இருப்பிடமாக திகழ்கிறது. இதில் சுமார் 60 இனங்கள் நச்சுத்தன்மை வாய்ந்தவையாகும். பல்லுயிர் வெப்ப மையமாக (biodiversity hotspot) விளங்கும் இந்தியாவின் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகளில், புதுப்புது தாவர மற்றும் விலங்கினங்கள் கண்டறியப்படுவது அடிக்கடி நிகழும் ஒன்றாகும்.
முடக்கு வாதம் (Rheumatoid Arthritis) எனப்படும் நோயானது முதன்முதலில் 19ஆம் நூற்றாண்டில் கண்டறியப்பட்டதாகும். இன்றளவில் உலகின் சுமார் 1-2% மக்களை இந்த நோய் தாக்குகின்றது. ஓர் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம், நோய் ஏற்படுத்தும் நுண்ணுயிரிகளை விடுத்து, அந்த உடலின் திசுக்களை, குறிப்பாக மூட்டுகளைத் தாக்கி, பாதிப்பு ஏற்படுத்துவதே இந்நோய்க்குக் காரணமாகும்.
Bengaluru/ ஜூலை 1, 2022